புத்தாண்டு பயணம் – ஊசிமலை மலைவாழ் மக்களின் வாஸ்து ஆய்வு அந்தியூரில் தொடங்கியது...

புத்தாண்டு பயணம் – ஊசிமலை, மலைவாழ் வாழ்க்கை & வாஸ்து பார்க்க சென்றபோது...

புத்தாண்டு நாள்.
ஊசிமலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறையும், வாஸ்து அமைப்பும் நேரில் ஆய்வு செய்வதற்காக நான் ஒரு பயணத்தைத் தொடங்கினேன்.

ஈரோட்டில் இருந்து எனது பயணம் அந்தியூர் வழியாக அமைந்தது.

அதிகாலை நேரம்.
விடிந்தும் விடியாத அந்தச் சூழ்நிலை.
சுற்றிலும் மழை பெய்யலாம் என்று சொல்லும் அளவுக்கு காற்று, மேகம், ஈரப்பதம் – எல்லாமே கலந்து இருந்தது.

அந்தியூரில் ஒரு சிறிய நிறுத்தம் – பெரிய கவனம்
அந்தியூரில் தேநீர் அருந்துவதற்காக காரை நிறுத்தினேன்.
தேநீர் கடை என்றாலே நம்ம ஊர்களில் ஒரு சாதாரண அமைப்பு தான்.
ஆனால் இந்தக் கடை… முழுக்க முழுக்க வேற லெவல்.
டீ டிஸ்ப்ளே – ஆர்கனைஸ்டாக
ஸ்நாக்ஸ் டிஸ்ப்ளே – தனித்தனி
டீ மேக்கர், காபி மேக்கர் – ஒழுங்கான இடத்தில்

“எங்கு என்ன கிடைக்கும், எந்த பக்கம் கிடைக்கும்” என்று சொல்லும் திசை அறிவிப்பு பலகை

இதுவரை நான் பார்த்திராத ஒரு திட்டமிட்ட தேநீர் கடை.

இது சரியாக
👉 அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில்
👉 உலகப் பிரசித்தி பெற்ற அந்தியூர் சந்தைக்கு முன்பாக
அமைந்துள்ளது.

இது ஒரு franchise அடிப்படையிலான டீக்கடை என்றாலும்,
பொதுவாக மக்கள் தங்களுடைய ஊர் டீக்கடைகளையே விரும்புவார்கள்.

ஆனால் இங்கு…
👉 எப்போதும் கூட்டம்
👉 அருமையான சுவை
👉 அனைத்து வகை பலகாரங்கள்
👉 பைக், கார் நிறுத்த வசதி

எல்லாமே இருந்தது.

வாஸ்து பார்வை – உடனே வேலை செய்ய ஆரம்பித்தது

கடை அமைப்பை கவனித்தவுடன்,
என்னுடைய வாஸ்து பார்வை தானாகவே செயல்பட ஆரம்பித்தது.

👉 கடை கிழக்கு பார்த்த அமைப்பு.
என் அனுபவத்தில்,
கிழக்கு பார்த்த கடைகள்
மேற்கு பார்த்த கடைகள்

👉 தேநீர் கடைகளுக்கு மிகச் சிறப்பான பலனை தருவதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

கிழக்கு என்றாலே:
மக்களின் ஆற்றல் (Energy) அதிகம்
இயக்கம், வருகை, ஆர்வம் அதிகம்
சனியின் தாக்கம் குறைவு

👉 இதன் அர்த்தம் ஒரே ஒன்று:
வெற்றி நிச்சயம்.

மேலும்,
👉 ஈசானிய (வடகிழக்கு) கிழக்கில் தெரு பார்வை (Street View)

இது ஒரு மிகப் பெரிய வாஸ்து பிளஸ்.

விளம்பரம் தேவையில்லாத அமைப்பு

இது எப்படி என்றால்,
மும்பையில் அம்பானி வீட்டுக்கு “முகவரி கேட்பது” போல.

அந்த அளவுக்கு:
இடம்
திசை
பார்வை
இயக்கம்

எல்லாமே மக்களை தானாகவே இழுத்து வரக்கூடிய அமைப்பு.

👉 இதுபோன்ற வாஸ்து அமைப்பு உள்ள இடங்களுக்கு
விளம்பரம் இல்லாமலேயே மக்கள் ஓடோடி வருவார்கள்.

ஒரு கூடுதல் கவனம் – கோவில் & திசை

தேநீர் குடித்து,
அந்தச் சிறிய இடைவேளையை முடித்துவிட்டு,
வாகனத்தில் ஏறும்போது…

👉 கடையின் தெற்கு பக்கத்தில்,
👉 மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் இருப்பதை கவனித்தேன்.

சூரியன் உதயத்தை பார்த்து,
கடை கிழக்கு பார்த்து இருப்பதை உறுதி செய்தேன்.

அன்று மார்கழி மாதம் என்பதால்,
ஒருமுறை காம்பஸையும் பார்த்து சரி செய்து கொண்டேன்.

அப்போது கவனித்தேன்…

👉 கோபுரம் வடக்கு பார்த்து உள்ளது.
என்று எனக்குள் கொஞ்சம் சத்தமாக சொல்லி முடிப்பதற்குள்

👉 “இது பத்திரகாளி அம்மன் கோவில்.”
என்று அருகில் இருப்பவர் அதை என்னிடம் சொல்லி உறுதிப்படுத்தினார். 

வாஸ்து விளக்கம் – ஏன் வடக்கு பார்த்து பெண் தெய்வங்கள் உள்ளார்கள்?

வாஸ்து ரீதியாக இதை சுருக்கமாகச் சொல்லலாம்.

பெண் தெய்வங்கள்:

அதிகமான தீவிர வெளிச்சத்தை விரும்புவதில்லை

மிக அதிக ஒளி, பெண் தன்மையின் சாந்தத்தை குலைக்கிறது

👉 இது மனிதர்களுக்கு மட்டுமல்ல,
👉 தெய்வ வடிவங்களுக்கும் பொருந்தும்.

அதனால்:
அம்மன் கோவில்கள்
வடக்கு மற்றும் தெற்கு சார்ந்த அமைப்பில்
இருப்பதை பல இடங்களில் காணலாம்.
---

முடிவாக…

இந்த ஒரு சாதாரண தேநீர் நிறுத்தம்,
எனக்கு:

ஒரு சிறந்த வாஸ்து உதாரணம்

இடம் – திசை – இயக்கம் – ஆற்றல்
எப்படி வணிக வெற்றியை உருவாக்குகிறது என்பதற்கான
ஒரு நேரடி அனுபவமாக மாறியது.

பயணம் என்பது இடமாற்றம் மட்டுமல்ல…
👉 கவனிப்பு இருந்தால்,
👉 ஒவ்வொரு இடமும் ஒரு பாடம்.

#srikothaivastu
#NNavaneeth
#vastuconsultant
#vastucourse

Comments

Popular posts from this blog